வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: சனி, 13 செப்டம்பர் 2014 (13:45 IST)

அரசுப் பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் - ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

அரசுப் பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் அமைப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
அரசுப் பேருந்துகளில் தானியங்கிக் கதவுகள் அமைக்கப்படாததால், மாணவர்கள் உள்ளிட்டோர் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் விபத்துகள் ஏற்படுவதாகவும் இதனால் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் கூறித் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தலைமை நீதிபதி கே.எஸ்.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. 
 
பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மாநில அரசு இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை நாள்தோறும் பழுது பார்த்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.