மனைவியின் கள்ளக்காதலனை ஓடும் காரிலிருந்து தள்ளி கொலை முயற்சி செய்த வாலிபர்


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 4 ஜூன் 2016 (15:30 IST)
புதுக்கோட்டியில் வாலிபர் ஒருவர் தனது மனைவியின் கள்ளக்காதலனை ஓடும் காரில் இருந்து தள்ளி கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
பட்டுக்கோட்டையை சேர்ந்த நடனக்கலைஞர் சரவணன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் இஸ்லாமிய பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு அபிஷேக் முகம்மது என்ற மகன் உள்ளார்.
 
சரவணன், கிராமப்புறங்களில் நடக்கும் திருவிழாக்களில் நடன நிகழ்ச்சி நடத்தும் நடனக் குழு ஒன்றினை நடத்தி வந்துள்ளார். இதற்கிடையில், சரவணன் மனைவிக்கும், அவரது குழுவை சேர்ந்த வாளமீன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, சரவணன் மனைவியும், வாளமீனும் கடந்த மாதம் மகன் அபிஷேக் முகமதுவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். அவர்களை தேடி சரவணன் ஊர் ஊராக அலைந்துள்ளார்.
 
இந்நிலையில், வாளமீன் திண்டுக்கல்லில் அருகில் தங்கியிருப்பதை அறிந்த சரவணன், அங்கு சென்று மனைவியை அங்கேயே விட்டுவிட்டு வாளமீனையும், தனது மகனையும் அழைத்து கொண்டு புதுக்கோட்டைக்கு வந்தார்.
 
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கி செல்லும்போது, வரும் வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக காரில் இருந்து வாளமீனை கீழே தள்ளியுள்ளார். ஆனால், அப்பகுதி வாலிபர்கள் காரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.
 
பின்னர், காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க, புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனையும், சிறுவனையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சரவணனிடம் நடத்திய விசாரணையில் இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :