Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எந்த நிலையிலும் போயஸ் கார்டன் இல்லத்தை விடக்கூடாது: தினகரனுக்கு டிப்ஸ் கொடுத்த சசிகலா!

Sasikala| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (10:47 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு, அவரது போயஸ் தோட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவுடன் இருந்த  சசிகலாதான் பராமரித்து உடன் வசித்து வந்தார். தற்போது சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போயஸ் இல்லம்  யார் நிர்வகிப்பது, யாருக்கு செல்லும் என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் மக்களிடைய நிலவி வருகிறது.

 
இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் இல்லத்தை முற்றுகையிட்டு கைப்பற்றலாம் என சசிகலா  தரப்பினர் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தீபா ஆதரவாளர்கள் போயஸ் தோட்டத்தை கைப்பற்றிவிடக்கூடாது என வழக்கத்திற்கு மாறாக தனியார் செக்யூரிட்டிகளும், கட்சிக்காரர்களும் போயஸ் தோட்டத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது துணைப்பொதுச் செயலாளராக நியமித்திருக்கும் டி.டி.வி.தினகரனை போயஸ் இல்லத்திலேயே தங்கச் சொல்லியிருக்கிறாராம் சசிகலா.
 
ஏற்கெனவே இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்,போயஸ் கார்டன்  இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக்குவேன் என அறிவித்தார்.இதற்கான கையெழுத்து இயக்கத்தையும் அவர்  தொடங்கினார்.
 
இந்நிலையில் நினைவிடமாக்கும் முயற்சியை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், தினகரனுக்கு, சில சட்ட  ஆலோசனையையும் சசிகலா கூறிவிட்டுச் சென்றுள்ளாராம், எந்த நிலையிலும் போயஸ் தோட்ட இல்லத்தை விடக்கூடாது  என்ற நிலையில், சசிகலாவும், அவரது குடும்பத்தாரும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :