1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (13:27 IST)

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா மற்றும் 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மற்றும் ஜாமீன் மனுக்கள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி ரத்தின கலா 4 பேரின் மனுக்களையும் நாளை விசாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு அவசர கதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும், அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனையாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், தீர்ப்பை நிறுத்திவைத்து, உடனடியாக ஜாமீன் வழங்குமாறும், ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றத் தயார் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.