வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (19:54 IST)

அண்ணி மீது தாக்குதல்: கொழுந்தனாருக்கு 4 ஆண்டு சிறை

அண்ணி மீது தாக்குதல் நடத்தியதாக அவரது கொழுந்தனாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரூர் சார்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் மகன்கள் சாமிக்கண்ணு (35), குமார் (29).  சாமிக்கண்ணு மற்றும் அவரது தம்பி குமார் இடையே நிலத்தகராறு இருந்ததாம். இந்த நிலையில், நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 8.11.2014-ல், சாமிக்கண்ணுவின் மனைவி கோவிந்தம்மாள் (32) என்பவர் மீது, அவரது கொழுந்தனார் குமார் கொடுவளால் தாக்குதல் நடத்தினராம். இதில், கோவிந்தமாளுக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்டப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.


 

இது குறித்து வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட விவசாயி குமாருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதம் விதித்து சார்பு நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஜோதி உத்தரவிட்டார்.  

கரூர் சி.ஆனந்தகுமார்