வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:30 IST)

திருமணத்திற்கு மறுத்த மாணவியை கொன்று எரித்த பெற்றோர்கள் - காதலுக்கு எதிர்ப்பா?

நாமக்கல் அருகே திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 11ம் வகுப்பு மாணவியைக் கொன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள .வாழவந்தியை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி ராசம்மாள். இவர்களுக்கு சுபாஷ் சந்துரு (18) என்ற மகனும், ஐஸ்வர்யா (17), அபிநயா (15) என 2 மகள்களும் உள்ளனர். ஐஸ்வர்யா திருச்சியில் ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 1 படித்து வந்தார்

11ம் வகுப்பு படித்து வந்த ஐஸ்வர்யாவுக்கும், அவரது உறவினரான சேந்தமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். னால் இந்த திருமணத்திற்கு ஐஸ்வர்யா மறுப்பு தெரிவித்தார். மேலும், 18 வயது நிறைவடைந்த பின் தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

எனினும் பெற்றோர் தொடர்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தி வந்தனர். இதனால் நாமக்கல்லில் உள்ள குழந்தை திருமண தடுப்பு பிரிவுக்கு ஐஸ்வர்யா புகார் தெரிவித்தார். இதன்பேரில், குழந்தை திருமண தடுப்பு பிரிவினர், ஐஸ்வர்யாவின் பெற்றோரை சந்தித்து கவுன்சிலிங் கொடுத்தனர்.

இதற்கிடையே, மீண்டும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ஐஸ்வர்யா, தனக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை என கூறியுள்ளார். இந்த பிரச்சனை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஐஸ்வர்யாவுக்கும், அவரது அண்ணன் சுபாஷ் சந்துருவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சுபாஷ் சந்துரு ஒரு துண்டினால், ஐஸ்வர்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர், காவல் துறைக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவின் உடலை, அவரது பெற்றோர் அவசர, அவசரமாக, சுடுகாட்டில் எரித்து விட்டனர். இந்த தகவலறிந்த காவல் துறையினர் சுபாஷ் சந்துருவையும், அவரது தந்தையையும் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் தலித் ஒருவரை காதலித்ததால் ஐஸ்வர்யா சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தெரிந்தும் காவல்துறையினர் மறைப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.