Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபாவிற்கு ஆதவு ; சசிகலா உருவ பொம்பை எரிப்பு - பொதுமக்கள் கோஷம்


Murugan| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (12:05 IST)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசிக்கும் பொதுமக்கள், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் உருவ பொம்மையும் எரித்தும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரது தோழி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரை ஏற்றுக் கொண்டாலும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
இது பல்வேறு மாவட்டங்களில் எதிரொலித்து வருகிறது. புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள கிராமம் மறமடக்கி.  கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு அதிக வாக்குகள் இந்த தொகுதியில் கிடைத்தது.
 
இந்நிலையில், அந்த கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை திரண்டனர்.  அவர்கள் சசிகலாவிற்கு எதிராகவும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவிற்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினர்.
 
அப்போது சிலர், சசிகலாவின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


இதில் மேலும் படிக்கவும் :