Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அனிதா.. நீங்க நாளைக்கு சட்டசபைக்கு வரணும்: ஓபிஎஸ் வர சொல்லி இருக்காரு!

அனிதா.. நீங்க நாளைக்கு சட்டசபைக்கு வரணும்: ஓபிஎஸ் வர சொல்லி இருக்காரு!


Caston| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (16:49 IST)
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது வர்தா புயல் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனை முதல்வர் பன்னீர்செல்வம் நாளை சட்டசபைக்கு வாருங்கள் விளக்கம் அளிக்கிறேன் என கூறியுள்ளார்.

 
 
வர்தா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட இடங்களில் மரங்கள் நடுவதை உடனடியாக மேற்கொள்ளவில்லை. மரங்கள் எப்போது நடப்படும் என்ற அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக திமுக உறுப்பினர்  அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
 
அப்போது பதில் அளித்த முதல்வர் பன்னீர்செல்வம் பல்வேறு தியாகச் செயல்களைப் புரிந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அந்தத் திட்டத்தைத் தொடங்க இருப்பதாக கூறினார்.
 
மேலும், நாளை நான் தரும் பதிலுரையில் தங்களுக்குத் தேவையான அனைத்து பதில்களையும் தருவேன். எனவே, தவறாது அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :