1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (16:11 IST)

ஆந்திர துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: விஜயகாந்த் வலியுறுத்தல்!

ஆந்திர துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
ஆந்திர வனப்பகுதியில் 7.4.2015 அன்று அதிகாலை ஆந்திர வனத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கி சூடு தற்காப்பிற்காக நடத்தப்பட்டதென்று ஆந்திர மாநில காவல்துறையும், வனத்துறை அதிகாரிகளும், கூறியபோதும், அந்த படுகொலை நடந்த நேரம், இடம், பலியானவர்கள் உடம்பில் காணப்பட்ட தீக்காயங்கள் எந்த ஒரு ஆந்திர போலீசார் மீதும் ஒரு சிறு கீறல் கூட இல்லாதது; இறந்தவர்கள் பக்கத்தில் போடப்பட்டிருந்த செம்மரகட்டைகளில் எழுதபட்டிருந்த எண்கள் என அனைத்துமே இந்த படுகொலை திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இருந்தது.
 
எனவே இப்படுகொலை பற்றி தெரிந்தவர்கள் இதுபோன்ற படுகொலைகள் இனிமேல் நடைபெறாவண்ணமும், இறந்த தமிழர்களின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிற காரணத்தினால் அவர்களுக்கு அரசின் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் இழப்பீட்டு தொகை போன்ற நிவாரணங்கள் கிடைக்க வழி செய்யும் பொருட்டு மேற்கூரியவர்களிடம் உண்மைகளை தெரிவிக்கவேண்டும் என்று பொதுமக்களை தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
 
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.