1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2015 (00:27 IST)

சென்னையில் ஓவியக்கண்காட்சி

சென்னையில், புரட்சியின் நிறம் என்ற தலைப்பிலான ஒரு அழகிகிய ஓவியக் கண்காட்சி நடைபெற உள்ளது.
 

 
ஓவியர் கு. புகழேந்தி, கடந்த 32 ஆண்டுகளாக சமூகப் அக்கறையுடன் ஓவியப்பணி செய்து வருபவர். தனது ஓவியப்பணிக்காக, தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்டு, பெரிதும் பாராட்டப்பட்டவர்.
 
தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஓவியக் காட்சிகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர். சமூக அக்கறையுடன் ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் அவரது அழகிய ஓவியங்கள், சென்னையில், 
புரட்சியின் நிறம்” தலைப்பிலான ஓவியக்காட்சி, செப்டம்பர் 8 முதல் 13 வரையில் நடைபெறுகின்றது.
 
சென்னை தியாகராயர் நகர் செ.தெ. நாயகம் மேனிலைப்பள்ளியில், செப்டம்பர் 8 அன்று தொடங்கி, செப்டம்பர் 13 வரை, 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஓவியக் காட்சியில், புரட்சியாளர் சே குவேராவின் பல்வேறு கோண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல், மாலை 8 மணி வரையிலும், ஓவியங்களைப் பார்வையிடலாம்.
 
இந்த ஓவியக் காட்சியின் தொடக்க நாள் நிகழ்விலும், நிறைவு நாள் நிகழ்வில், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், கலைத்துறையினர் பங்கேற்று சிறப்பு செய்ய உள்ளனர்.