வருகிறது அம்மா பெட்ரோல் பங்க் - தமிழகத்தில் 10 இடங்கள் தேர்வு


Murugan| Last Modified வெள்ளி, 16 ஜூன் 2017 (16:14 IST)
தமிழக அரசின் சார்பாக தமிழகத்தின் சில இடங்களில் பெட்ரோல் பங்க் அமைய இருக்கிறது.

 

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் முக்கியமானது அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட் ஆகியவை ஆகும்.
 
இந்நிலையில், தற்போது அவரின் பெயரில் ‘அம்மா பங்க்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த தகவலை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். 
 
முதலில் தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பங்க் அமைக்கப்படும் எனவும், இந்திய எண்னெய் நிறுவனங்களுடன், நுகர்பொருள் வாணிப கழகம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது எனவும் அவர் கூறினார்.
 
இதற்காக சேலம் மாவட்டத்தில் முதல்வரின் பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி மற்றும் சென்னையில் நந்தனம் பகுதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :