செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : புதன், 30 செப்டம்பர் 2015 (00:04 IST)

அம்மா மினரல் வாட்டருக்கு போட்டியாக நமக்கு நாமே தண்ணீர் பாட்டில்

அம்மா மினரல் வாட்டருக்கு போட்டியாக நமக்கு நாமே தண்ணீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
 

 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், நமக்கு நாமே விடியல் பயணத்தை கடந்தசில நாட்களாக மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில், திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில், உள்ள நத்தம் பகுதியில் திமுக ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கூட்டதிதல், பொது மக்களிடையே பேசினார்.
 
அப்போது, திடீரென அங்கு வந்த, திமுக நிர்வாகி ஒருவர், நமக்கு நாமே தண்ணீர் என்ற வாசகம் கொண்ட புதிய தண்ணீர் பாட்டிலை அங்குள்ள பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கினர்.

தற்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், பொது மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினரல் வாட்டர் தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, அந்த மினரல் வாட்டருக்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
இந்த நிலையில், அம்மா மினரல் வாட்டருக்கு போட்டியாக நமக்கு நாமே தண்ணீர் பாட்டில் அறிமுகம் செய்யப்பட்டதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர். 
 
சபாஷ் சரியான போட்டி.