Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உதயமாகிறது ‘அம்மா திமுக’: எம்ஜிஆர் சமாதியில் தொடங்க திட்டம்!

உதயமாகிறது ‘அம்மா திமுக’: எம்ஜிஆர் சமாதியில் தொடங்க திட்டம்!


Caston| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:25 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று சசிகலா கட்சியை வழி நடத்துவார் என கூறப்பட்டு வருகிறது. அம்மா அம்மா என அழைத்தவர்கள் சின்னம்மா சின்னம்மா என அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

 
 
இந்நிலையில் சசிகலாவுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மட்டும் தான் ஆதரவு அளித்து வருவதாகவும். தொண்டர்கள் யாரும் சசிகலா தலைமை பொறுப்புக்கு வருவதை விரும்பவில்லை எனவும் தகவல் பரவி வருகிறது. இதனையடுத்து இதனை பயன்படுத்தி என்ற புதிய கட்சி ஒன்று உருவாக உள்ளது.
 
வரும் 24-ஆம் தேதி இனியன் சம்பத் அம்மா திமுக என்ற இந்த கட்சியை எம்ஜிஆர் சமாதியில் தொடங்க உள்ளார். இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நாளை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய சகோதரர் இனியன் சம்பத் தான் அம்மா திமுக என்ற இந்த கட்சியை தொடங்க உள்ளார். தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இனியன் சம்பத் 2011-ஆம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.
 
பின்னர் பழ. நெடுமாறனின் தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் அதிலிருந்தும் விலகி தமிழ் தேசிய கட்சியை தொடங்கிய இனியன் சம்பத் தற்போது அம்மா திமுக என்ற கட்சியை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :