Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகரில் அமீர் போட்டியா? சீமான் விளக்கம்

Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (19:45 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டதும் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கலைக்கோட்டுதயம் மாற்றப்படுவார் என தெரிகிறது.

விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், தினகரனுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கவே விஷால் போட்டியிடுவதாகவும் இயக்குனர் அமீர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தான் போட்டியிட விரும்புவதாகவும், தான் போட்டியிட்டால் விஷாலுக்கு தன்னால் நெருக்கடி கொடுக்க முடியும் என்றும் அமீர் கூறியுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

இதுகுறித்து சற்றுமுன் பேட்டி ஒன்றில் கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அமீர் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்போம்; அமீருக்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை' என்று கூறியுள்ளார். எனவே நாளை விஷால் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் அமீர் ஆர்.கே.நகர் நாம் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :