வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (10:14 IST)

சட்டசபை காவலர் போல் வேஷம் போட்டார்களா காவல்துறையினர்கள்?

தமிழக சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.



சட்டசபையில் உள்ள காவல்துறையினர் தவிர தமிழக காவல்துறை அதிகாரிகளும் இந்த பணியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். ஆனால் இதை அரசு மறுத்துவந்தது. சட்டசபை காவலர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களை வெளியேற்ற பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களீல் அம்பத்தூரை சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி, சட்டசபை காவலர் சீருடையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகளூம், திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

எதிர்க்கட்சியின் உண்மையான கோரிக்கைகளுக்கு மதிப்பு கொடுக்காமல், ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த வாக்கெடுப்பாகவே நேற்று நடந்த வாக்கெடுப்பை பொதுமக்கள் பார்க்கின்றனர்.