பள்ளிக் குழந்தைகளுக்கான சத்துணவை பரிசோதித்த பாமக எம்பி அன்புமணி


K.N.Vadivel| Last Updated: புதன், 17 ஜூன் 2015 (06:04 IST)
அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, சுகாதாரமான முறையில் உள்ளதா என பாமக எம்பி அன்புமணி பரிசோதனை செய்தார்.
 
 
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி அழகம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
 
இந்நிலையில், இந்த பள்ளிக்கு திடீர் என விசிட் அடித்தார் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி. அப்போது மதிய நேரம் என்பதால், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவை அவரே நேரில் சென்று வாங்கிப் பார்த்து பரிசோதித்தார்.
 
மேலும், அந்தப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளிடம் சத்துணவு வழங்குவது பற்றி விசாரித்தார். பின்பு, சமையளரிடம் சுகாதாரமாகவும், சுவையாகவும் சத்துணவை குழந்தைகளுக்கு வழங்கமாறு அறிவுறுத்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :