வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 22 ஆகஸ்ட் 2018 (10:12 IST)

பேரணிக்கு ஆள் சேர்க்கும் துரை தயாநிதி : தெறித்து ஓடும் திமுகவினர் : அதிர்ச்சியில் அழகிரி

அழகிரி அறிவித்துள்ள பேரணிக்கு திமுகவினரிடமிருந்து பெரிய ரெஸ்பான்ஸ் இல்லாததால் அழகிரி தரப்பு அப்செட் ஆகியிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது.

 
கடந்த 5 வருடங்களாக தன்னை கட்சியிலிருந்து விலக்கி வைத்திருப்பதால் கடுமையான கோபத்தில் இருக்கிறார் அழகிரி. தந்தையும், திமுகவின் தலைவருமான கருணாநிதியின் மறைவுக்கு பின் தன்னை கட்சியில் சேர்ப்பார்கள் என எதிர்பார்த்தார். 
 
ஆனால், அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். எனவே, தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என கருதிய அழகிரி, வருகிற செப்டம்பர் 5ம் தேதி சேப்பாக்கத்திலிருந்து, கருணாநிதியின் சமாதி வரை தனது ஆதரவாளர்களுடன் ஒரு பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார்.

 
எனவே, இந்த பேரணியில் பெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இது தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொள்ளும் பணியை அவரின் மகன் துரை தயாநிதியிடம் அழகிரி ஒப்படைத்துள்ளார். ஆனால், அவர் போன் செய்தால் பெரும்பாலானோர் எடுப்பதே இல்லையாம். எடுக்கும் சிலரும் சொல்கிறேன் தம்பி எனக்கூறி விட்டு கட் செய்து விடுகிறார்களாம். எனவே, எத்தனை பேர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. 
 
இதுபற்றி அழகிரியிடம் துரை தயாநிதி கூற “வருகிறேன் என கூறியவர்களிடம் தொடர்ந்து பேசுங்கள். கடைசி நேரத்தில் கம்பி நீட்டி விடப்போகிறார்கள். எத்தனை பேர் வருகிறார்கள் என்பது எனக்கு முன்பே எனக்கு தெரிந்தாக வேண்டும். 4ம் தேதி அவர்கள் அனைவரையும் சென்னையில் தங்க வைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என அழகிரி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
 
இதனால் துரை தயாநிதி படு டென்ஷனில் இருக்கிறார் என செய்தி கசிந்துள்ளது.