Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அப்பாவுக்கு இப்படி இருக்கும் போது ஸ்டாலின் செயல் தலைவரா?: கொந்தளித்த அழகிரி!

அப்பாவுக்கு இப்படி இருக்கும் போது ஸ்டாலின் செயல் தலைவரா?: கொந்தளித்த அழகிரி!


Caston| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (14:45 IST)
தலைவர் கருணாநிதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 
 
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் கட்சியை பலப்படுத்த மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கப்படலாம் என செய்திகள் வந்தன.
 
இதனையடுத்து கருணாநிதியை பார்க்க கோபாலபுரம் வந்த மு.க.அழகிரி கட்சி பதவி குறித்து வெளியில் பேசப்படும் தகவல்கள் குறித்து கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைவர் உடல்நிலை குணமாகி வரும் வரையில் எதைப் பற்றியும் யாரும் பேச வேண்டாம். அவர் நல்ல நிலையில் இருக்கும்போதே ஏன் இவ்வாறு செய்தி பரவுகிறது என குடும்ப உறுப்பினர்களிடம் கோபப்பட்டாராம்.
 
கடந்த சில நாட்களாக கட்சித் தலைவர் பதவி குறித்து திமுகவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஸ்டாலினை செயல் தலைவர் பதவியை முன்னிறுத்தியும் பேசப்படுகிறது. இதில் உடன்படாத அழகிரி தலைவருக்கு பிறகான நிலையை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனை ராஜாத்தி அம்மாள் உட்பபட சில குடும்ப உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :