Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா-அஜித் சந்திப்பு வெறும் கப்சாவா? - செய்தி தொடர்பாளர் விளக்கம்

புதன், 28 டிசம்பர் 2016 (03:29 IST)

Widgets Magazine

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் அஜித் சந்தித்து பேசியதாக வெளியான தகவல்கள் நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.


 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு டிசம்பர் 29-ம் தேதி காலை 9.30 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையில், ஜெயலலிதா மறைவடைந்த போது வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார் அஜித் அப்போது நேரில் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாததால், இரங்கல் மட்டும் தெரிவித்து இருந்தார். பின்னர், சென்னை வந்ததும் ஜெயலலிதாவின் சமாதிக்கு, தனது மனைவி ஷாலினியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், சசிகலாவை நேரில் சந்தித்தாக கூறப்பட்டது. போயஸ் கார்டன் சென்று அஜித், அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஆனால், மேற்கண்ட தகவலுக்கு நடிகரின் அஜித்தின் செய்தி தொடர்பாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார். ’அஜித் - சசிகலா இடையே எந்த சந்திப்பும் நடக்கவில்லை. இது தொடர்பாக, வெளியாகிவரும் பொய்யான வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்’ என அவர் கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வரும் ஆண்டும் புது ரேஷன் கார்டு கிடையாது: உள்தாள் தான் ஒட்டப்படும்

ஆதார் எண் இணைக்கும் பணி நிறைவடையாததால், ரேஷன் கார்டில் அடுத்த ஓராண்டிற்கும் உள்தாள் ஒட்ட ...

news

எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள்! - மாமனார் வீடு முன்பு இளம்பெண் போராட்டம்

தனது கணவரை ஒப்படைக்கும் வேண்டும் என்று மாமனார் வீடு முன்பு இளம்பெண் போராட்டம் நடத்தியது ...

news

வைகோ விலகியது பெரிய விஷயமல்ல: சீண்டும் சீமான்

மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறியது பெரிய விஷயமல்ல என்று நாம் தமிழர் கட்சி ...

news

70 லாரி தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! [வீடியோ]

கடுமையான விலை வீழ்ச்சியால் கடும் கோபத்திற்கு உள்ளான விவசாயிகள், 70 லாரி தக்காளியை ...

Widgets Magazine Widgets Magazine