வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 15 மார்ச் 2018 (19:39 IST)

ஏர்டெல் சிக்னல் கோளாறு: வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தமிழகத்தில் ஏர்செல் சேவை இரண்டு நாட்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். 
 
ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஏர்செல் நிறுவனம் முதலில் தெரிவித்தது.
 
அதன்பின்னர், ஏர்செல் திவால் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை வேறு நெட்வொர்ட் நிறுவனங்களுக்கு மாற்றி வருகின்றனர். 
 
இந்நிலையில், தற்போது ஏர்டெல்லுக்கும் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாலர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 
இது குறித்து ஏர்டெல் கூறியதாவது, சிக்னல் பிரச்சனை தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இருப்பினும் வாடிக்கையாளர்களின் எண்ணிற்கு சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யவும் என கூறப்பட்டுள்ளது.