Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுக-வின் டுவிட்டர் பதிவுக்கு பதிலடி கொடுத்த ஓ பன்னீர்செல்வம்!

Sasikala| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (10:58 IST)
அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கான @AIADMKOfficial ஐடியிலிருந்து இன்று காலை ஒரு செய்தி பதிவு  செய்யப்பட்டிருந்தது. அதில் #துரோகி என எழுதப்பட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது.

 
இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலடி தரும் விதமாக தமிழக முதலமைச்சர் அலுவலகத்தின் @CMOTamilNadu என்ற கணக்கில்,  "அம்மாவின் உண்மை தொண்டன் துரோகியா? மக்கள் முடிவு செய்வார்கள் யார் துரோகிகள் என்று" தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதனை தொடர்ந்து அதிமுக-வின் டுவிட்டர் கணக்கிலிருந்து 'துரோகி' என எழுதப்பட்ட ட்வீட் தற்போது நீக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :