Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘அதிமுக எம்.பி.க்கள் தொடை நடுங்கிகளாக உள்ளனர்’ - டி.ராஜேந்தர் ஆக்ரோஷம்

Last Modified: ஞாயிறு, 8 ஜனவரி 2017 (11:39 IST)

Widgets Magazine

அதிமுக அரசு ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கவில்லை; ஜால்ரா தான் போடுகின்றனர் என்றும் அதிமுக எம்.பி.க்கள் தொடை நடுங்கி எம்.பி.க்களாக உள்ளனர் என்றும் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.


 

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்திட வலியுறுத்தி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு குழு மற்றும் பொதுமக்கள் சார்பாக பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ”வீரம் நிறைந்த மண்ணில் தமிழர்களின் உணர்வையும் வீரத்தையும் காக்க நடத்தப்படுவது ஜல்லிக்கட்டு. இதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை, தடை என கூறிவருவது எத்தனை நாளைக்கு? இதற்கு முடிவு இல்லையா?

தமிழகத்தில் அதிமுகவுக்கு பெரும்பாலான எம்.பி.க்கள் இருந்தும், அவர்கள் ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி எடுக்கவில்லை. மாநில அ.தி.மு.க. அரசு இதற்காக குரல் கொடுக்கவில்லை. ஜால்ரா தான் போடுகின்றனர். அதிமுக எம்.பி.க்கள் தொடை நடுங்கி எம்.பி.க்களாக உள்ளனர்.

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை ஆகியோர் மக்களிடம் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனக்கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடியிடம் கூறவில்லை. நமஸ்காரம் தான் செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

உல்லாசத்துக்கு இடையூறு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்

கள்ளக்காதலுக்கு இடையூறாகா இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது இரண்டரை வயது ...

news

‘சசிகலாவை சந்திக்க அவசியம் இல்லை’ - ஜெ. அண்ணன் மகள் தீபா அதிரடி

சசிகலாவை நீங்கள் சென்று சந்திப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ...

news

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கஷ்டம்தான்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

20 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து ...

news

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக பா. வளர்மதி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி

Widgets Magazine Widgets Magazine