வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 27 மே 2015 (01:02 IST)

ஜெயலலிதாவுக்காக அமைச்சர் முதல் சாமானியன் வரை மொட்டை போட்ட 5000 பேர்

தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றதை தொடர்ந்து, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், கரூர் மாவட்ட அதிமுகவினர் 5,000 பேர் மொட்டை போட்டு, அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று, கரூர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பல்வேறு நேர்தித்கடன் செலுத்தி வந்தனர்.
 
அதுபோலவே, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற்றதோடு, தமிழக முதலமைச்சராக 5 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
 
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக  பதவியேற்றதை தொடர்ந்து, கரூர் மாரியம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தும் விதமாக கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துதுறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமையில், முடிகாணிக்கை செய்து அக்னி சட்டி ஏந்தி வேண்டுதலை நிறைவேற்றினார். அவருடன் அதிமுகவைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.