Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவை அடுத்து ஜெ நினைவிடத்தில் ஓபிஎஸ் சபதம்

Sivalingam| Last Updated: வியாழன், 16 பிப்ரவரி 2017 (21:03 IST)
சிறைக்கு செல்லும் முன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் மூன்று முறை சமாதியில் அடித்து மூன்று சபதங்கள் செய்தார். அவருடைய ஒரு சபதம் நிறைவேறிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

 


இந்த நிலையில் இன்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் ஒரு சபத்தை செய்துள்ளார். ஆனால் சசிகலாவை போல் இவர் வாய்க்குள் சபதம் எடுக்காமல் வெளிப்படையாக கூறியுள்ளார்., மக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்; உறங்கமாட்டோம் என்பதே ஓபிஎஸ் அவர்கள் எடுத்துள்ள சபதம்

சசிகலாவின் குடும்ப ஆட்சிதான் இன்று பதவியேற்று உள்ளதாகவும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளும் எம்.எல்.ஏக்கள் நியாயமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா யாரை ஒதுக்கிவைத்தாரோ அவர்கள் தான் தற்போது அதிமுகவை இயக்குகிறார்கள் என்றும் சசிகலா குடும்பத்திடம் இருந்து அதிமுகவை மீட்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :