Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் புயலால் வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன் பகுதி (வீடியோ இணைப்பு)

ஓபிஎஸ் புயலால் வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன் பகுதி (வீடியோ இணைப்பு)


Caston| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (08:21 IST)
தமிழக முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஊடகங்களை சந்தித்து தான் வர்புறுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட உண்மையை கூறினார். மேலும் பல குற்றச்சாட்டுகளை வைத்து தமிழகத்தையே உலுக்கினார் ஓபிஎஸ்.

 
 
இதனையடுத்து பொதுமக்களும், தொண்டர்களும் ஓபிஎஸ்-க்கு பலத்த ஆதரவு வழங்கி வருகின்றனர். ஒரே இரவில் அவரை ஹீரோவாக தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். இவை அனைத்தும் சசிகலா மீதான் எதிர்ப்பு.
 
ஓபிஎஸ் வீட்டு பக்கத்தை இதுவரை சீண்டி பார்க்காதவர்கள் இன்று அவரது வீட்டின் முன் குவிந்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் தினறினர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா இருக்கும் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் கூட்டமே இல்லாமல் இருந்தது.

 

 
 
ஓபிஎஸின் அனல் பறக்கும் பேட்டியால் யாருமே போயஸ் கார்டன் பக்கம் சீண்டி கூட பார்க்கவில்லை. அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் மட்டும் தான் அங்கு சென்றனர். ஆனால் அதிமுக தொண்டர்கள் செல்லவில்லை. ஓரிருவரே அங்கு சென்றனர். இதனால் அந்த பகுதி இந்த பரபரப்பான சூழலிலும் வெறிச்சோடி காணப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :