கரிச்சட்டி தலையன் விஜயகாந்த் : அதிமுக கூட்டத்தில் தரம் தாழ்ந்து பேசிய நடிகை


Murugan| Last Modified செவ்வாய், 19 ஜனவரி 2016 (12:47 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஏகத்துக்கும் திட்டி இருக்கிறார் அதிமுக பிரசார பீரங்கிகளில் ஒருவரான நடிகை வாசுகி.

 

 
இவர் சத்யராஜ் நடித்த வேலைகிடைச்சிடுச்சு என்ற படத்தில், கவுண்டமணியிடம் டீச்சர் போல் நடித்து ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் அதிமுகவில் இணைந்து அக்கட்சிக்கு சார்பாக பிரசாரம் செய்து வருகிறார். 
 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய போது தேமுதிக விஜயகாந்தை ஏகத்துக்கும் ஒருமையில் திட்டி பேசினார். ப்ளீச் மண்டையன்... கருப்பு தலையன்.. கரிச்சட்டி தலையன்.. என்றெல்லாம் விஜயகாந்திற்கு பெயர் வைத்தார்.
 
மேலும் பேசும் போது “அவன் (விஜயகாந்த்) எங்க பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் சும்மா எங்க கட்சிகாரங்களையும், அம்மா அவங்களையும் அரசியல் நாகரீகமே தெரியாமல் பேசுகிறான். ப்ளீச் மண்டையன் விஜயகாந்திற்கு.. கரிச்சட்டி தலையனுக்கு டயலாக்கே பேச தெரியல.. இங்க விஜயகாந்த் கட்சிக்காரங்க எவன் இருந்தாலும் எனக்கு கவலையே இல்லை. அவனுக்கு உடனே போன் பண்ணி சொல்லட்டும்... 
 
சில தொகுதிகளை கொடுத்து,  விஜயாகாந்தை தமிழ் நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டினதே எங்க அம்மாதான். விஜயகாந்த் கட்சியில அவன், அவனோட பொண்டாட்டி அப்புறம் அவன் மச்சான் என மூன்று பேர்தான் இருக்கின்றனர்.வேற யாருமே இல்ல..
 
வேலூர்ல பொங்கல் விழா கொண்டாடும்போது சொல்றான்.. அடுத்த பொங்கல்ல விஜயகாந்த் முதலமைச்சர் ஆகித்தான் கொண்டாடுவானாம். ஏண்டா... முதலமைச்சர் பதவினா கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா?..என்று ஏகத்துக்கும் ஒருமையில் பேசினார் நடிகர் வாசுகி.


இதில் மேலும் படிக்கவும் :