Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த அதிமுக பிரமுகர் ; பொதுமக்கள் உன்ணாவிரதம் (வீடியோ)


Murugan| Last Modified ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (15:49 IST)
கரூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் ஆளுங்கட்சி பிரமுகரை கண்டித்து ஊர் பொதுமக்கள் பஜனை பாடி கடவுளுக்கு அராஜக செயலை தெரிவிக்கும் பொருட்டு நூதன முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

 

 
கரூர் அருகே பெரியக்குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ருக்மணி சமேத பண்டரிநாதன் திருக்கோயிலின் நிலத்தை அப்பகுதியை சார்ந்த ஆளும் கட்சி பிரமுகரான நகர அ.தி.மு.க அம்மா (ஜெ) பேரவை செயலாளர் செல்வராஜ் என்கின்ற மகேஷ் செல்வம் என்பவர் ஆக்கிமித்ததோடு, கழிவு நீர் குழாய் இணைப்பை உடைத்தும், சேதப்படுத்தியும் தற்போது புதிதாக கோயில் இடத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றார். 
 
இந்நிலையில் அவரது போக்கினை கண்டித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜுடம் மனுக்களும் கொடுக்கப்பட்ட நிலையில், ஆளுகின்ற அ.தி.மு.க கட்சி என்பதினால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் என்று பலதரப்பினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
மேலும்,  தற்போதைய கரூர் எம்.எல்.ஏ வும், கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வலதுகரமாக செல்வராஜ் இருப்பதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
 
அதோடு, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், தூங்கும் நிலையில் கடவுளுக்கே பஜனை பாடி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சி மிகவும் நூதனமாக இருந்தது.
 


இதில் மேலும் படிக்கவும் :