எம்.ஜி.ஆர் விழா ; பள்ளி, கல்லூரி பேருந்துகளை ஆக்கிரமித்த அதிமுகவினர் (வீடியோ)


Murugan| Last Modified புதன், 4 அக்டோபர் 2017 (18:24 IST)
கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள பேருந்து பணிமனை பின்புறம்   மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று காலை 9.20 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

 

 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மட்டுமில்லாமல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார். 
 
இந்நிகழ்ச்சியை காண, கரூர் மாவட்டம், முழுவதும் மக்களை திரட்டி அழைத்து வருவதற்காக பல்வேறு வழித்தடங்களில் இயங்கிய அரசுப்பேருந்துகள் முற்றிலும் இயக்கப்பட்டன. ஆங்காங்கே ஊராட்சி ஒன்றியம், நகரம், பேரூர் நகர கழகம் சார்பில் உள்ள அ.தி.மு.க வினர் ஏராளமான அ.தி.மு.க வினரையும், பொதுமக்களையும் அழைத்து வந்தனர். 
 
பேருந்துகள் பற்றாக்குறையினால் பல தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டதோடு, அந்த பேருந்துகளும் குவிக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய அரசியலமைப்பின் நான்காவது தூணாக விளங்கும், செய்தித்துறையில் அங்கம் வகிக்கும் செய்தியாளர்களை அழைக்க கரூர் தாலுக்கா அலுவலகத்திற்கு பள்ளி ஸ்கூல் வேன் அனுப்பி வைக்கப்பட்டது. 
 
அந்த பள்ளி வேனில் இடம் இல்லாத நிலையில், ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த அரசு பி.ஆர்.ஒ (செய்தி மக்கள் தொடர்பு துறை) ஜீப்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 
 
அப்போது ஒரு சிலர் மிகுந்த வேதனைக்குள்ளானார்கள். ஒரு மாநில முதல்வர் நிகழ்ச்சிக்கு, அதுவும் அரசு நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க அவர்களுடைய இரு சக்கர வாகனங்களுக்கும், கார்களுக்கும் கார்பாஸ், டூ வீலர் பாஸ் கொடுத்திருந்தால் கூட நாங்களே (செய்தியாளர்களே) சென்று செய்தி சேகரித்திருப்போம், ஆனால், செய்தியாளர்களை பள்ளி வாகனத்தில் அதுவும், ஸ்கூல் வேனில் அனுப்பி அவமானப்படுத்தி விட்டார்கள் என்று விரக்தியில் சென்றனர்.
 
எது எப்படியோ, செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு தான் வெளிச்சம் என்கின்றனர் மூத்த பத்திரிக்கையாளர்கள்.

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :