சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மனு அளிக்கலாம் : தொண்டர்களுக்கு ஜெயலலிதா அறிவிப்பு


Murugan|
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், விருப்பு மனு அளிக்கலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தொண்டர்களுக்கு அறிவித்துள்ளார்.

 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
 
“தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 20ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை தலைமைக் கழகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம். தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். 
 
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனு கட்டணமாக ரூ.11000, புதுவைக்கு ரூ.5000 மற்றும் கேரளாவிற்கு ரூ.2000 கட்டணமாக செலுத்த வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :