Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல்....


Murugan| Last Updated: திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:10 IST)
கோவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களின் வாக்கு மூலங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பின் உச்சத்தை அடைந்து வருகிறது..  சட்டசபையில் எனது பலத்தை நிரூபிப்பேன் என ஓ.பி.எஸ் கூறியதை அடுத்து, அனைத்து எம்.எல்.ஏக்களையும், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் உள்ள ஒரு விடுதியில் சசிகலா தரப்பு தங்க வைத்தது...
 
ஆனால், அவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்படிருப்பதால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இதனையடுத்து, இதுபற்றி விசாரிக்கவும், எம்.எல்.ஏக்களின் வாக்குமூலத்தை பதிவு செய்து தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே, காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி தமிழ்ச் செல்வன் கூவத்தூருக்கு சென்று, அங்கிருந்த எம்.எல்.ஏக்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் வாங்கி அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும், அவர்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கியிருப்பதாக அவர் கூறினார்.
 
ஆனால், காவல்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..
 


இதில் மேலும் படிக்கவும் :