பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ. கூட்டம் : எத்தனை பேர் ஆஜர்?


Murugan| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (12:14 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

 

 
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஆளும், சசிகலா தரப்பு மீது பல பகீரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். சசிகலா தரப்பு தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர் என கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது சசிகலா தரப்பிற்கு பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒ.பி.எஸ்-ஐ மிரட்டி ராஜினாமா கடிதத்தை பெறவில்லை என சசிகலா கூறினார். மேலும், அதிமுக பொருளாலர் பதவியிலிருந்தும் ஒ.பி.எஸ்-ஐ நீக்கி உத்தரவிட்டார்.
 
அதைத் தொடர்ந்து, இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பி.எஸ் சட்டமன்றத்தில் என் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அதற்கான நேரம் வரும் போது என் ஆதரவு எம்.எல்.ஏக்கள் யாரெனெ அவர்கள் தெரிந்து கொள்வார்கள், என்பது உட்பட பல்வேறு பரபரப்பு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
 
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தற்போது கூடியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதில் கலந்து கொண்டு அவர்களிடம் உரையாடி வருகிறார். அந்த கூட்டத்தில் 134 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், உண்மையிலேயே அனைத்து எம்.எல்.ஏக்களும் அதில் கலந்து கொள்ளவில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :