அதிமுக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம் ரத்து


Abimukatheesh| Last Modified புதன், 8 பிப்ரவரி 2017 (21:08 IST)
சென்னையிலிருந்து டெல்லி செல்லவிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 


அதிமுக எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று குடியரசு தலைவரை சந்திக்க சென்னை விமான நிலையம் சென்றனர். ஆனால் திடீரென அவர்கள் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆளுநர் நாளை சென்னை வருவது உறிதியானதால் அதிமுக தலைமை சார்பில், எம்.எல்.ஏ.க்கள் சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தனியார் பேருந்து மூலம் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆளூநர் சென்னை வரும் வரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவின் கட்டுப்பட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :