Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆட்சி கலைந்தால் கலையட்டும்: அதிமுக எம்எல்ஏ அசால்ட் பதில்!

ஆட்சி கலைந்தால் கலையட்டும்: அதிமுக எம்எல்ஏ அசால்ட் பதில்!


Caston| Last Modified புதன், 12 ஏப்ரல் 2017 (09:09 IST)
அதிமுகவின் சூலூர் தொகுதி கனகராஜ் ஆளும் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். தன்னுடைய கோரிக்கை நிறைவேறாவிட்டால் ராஜினாம செய்வேன் எனவும், இதனால் ஆட்சி கலைந்தால் கலையட்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 
 
கடந்த மார்ச் மாதம் கோவை சூலூர் தாலுகாவில் பெரியகுயிலியில் நடந்த கல் குவாரி வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனை நேரில் ஆய்வு செய்த அதிமுக சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் இதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எடப்பாடி அணியில் இருந்து வெளியேறிவிடுவதாக எச்சரித்தார்.
 
இவரது இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆளும் தரப்பு உடனடியாக அவரது கோரிக்கையை நிறைவேற்றி அவரை தங்கள் அணியில் தக்கவைத்துக்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் அவர் மற்றொரு கோரிக்கையுடன் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
 
திருப்பூர், சாமாளபுரத்தில் பிரச்சினைக்குரிய டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் மீண்டும் எச்சரித்துள்ளார். தற்போது சசிகலா அணியில் இருக்கும் அவர் அணி மாறுவீர்களா என்ற கேள்விக்கு. எதற்கு மாறவேண்டும் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும் என் தொகுதி மக்கள் சம்பாதிக்கட்டும் என்றார். மேலும் 122 எம்எல்ஏக்கள் பலம் உள்ள நிலையில் நான் ராஜினாமா செய்தால் பலம் குறையும், ஆட்சியும் கலையும், கலையட்டும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :