சட்டசபையில் விஜயதரணியின் புடவையை இழுத்த அதிமுக எம்.எல்.ஏ ?

Caston| Last Updated: புதன், 23 செப்டம்பர் 2015 (14:26 IST)
அதிமுக எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் என் புடவையை இழுத்தார்கள் என விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி இடையே நேற்று சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து வெளியே வந்த விஜயதரணி அதிமுக எம்.எல்.ஏ களை பற்றி கடுமையான புகார்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதல்வர்
ஜெயலலிதா காவல்துறை மானியத்தை பற்றி பேசிய பிறகு, தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி சபாநாயகரிடம் கேட்டேன். ஆனால், சபாநாயகர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்று கூறிய விஜயதரணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்டப்பேரவை நுழைவு வாயிலில், மறியலில் ஈடுபட்டபோது, என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த மறியல் போராட்டத்தில் தாக்குதல் எதுவும் நடக்காதது போல் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையை படித்தார். இதற்காக நான் எழுந்து கேட்ட போது, எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை.

அப்பொழுது அதிமுக எம்.எல்.ஏ க்கள் என்னை கேலியும், கிண்டலுமாக பேசினர். மேலும், அடிக்க வருவது போல செயல்பட்டனர். மேலும் என்னை பார்த்து அசிங்கம், அசிங்கமான வார்த்தைகளால் பேசினார்கள்.

எம்.எல்.ஏ க்கள் என் புடவையை பிடித்து இழுத்தார்கள் :

மேலும், எம்.எல்.ஏ க்களை வைத்து முதல்வர் என்னை அடிக்க முயற்சி செய்தார். பெண் எம்.எல்.ஏ க்கள் என் புடவையை பிடித்து இழுத்தார்கள். எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ க்களுக்கு சட்டசபையில் கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லை. இதை மிகப்பெரிய இழுக்காகவே நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :