Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடராஜன் முதல்வராக கையெழுத்து போடனுமா?: கொந்தளித்த அதிமுக எம்எல்ஏக்கள்!

நடராஜன் முதல்வராக கையெழுத்து போடனுமா?: கொந்தளித்த அதிமுக எம்எல்ஏக்கள்!


Caston| Last Modified வெள்ளி, 30 டிசம்பர் 2016 (16:04 IST)
பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அடுத்த முதல்வராக அவர் பதவியேற்க இருக்கிறார் என அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சாக இருகிறது. இந்நிலையில் நேற்று நடராஜனை முதல்வராக இருப்பதாக ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவியது.

 
 
நேற்று பொதுக்குழு முடிந்ததும் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என கூறப்பட்டது. நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இருக்கிறது என அமைச்சர்கள் எம்எல்ஏக்களிடம் அறிவுறுத்தினர்.
 
இதனையடுத்து இந்த கூட்டத்தில் சசிகலாவின் கணவர் நடராஜனை முதல்வராக்க அனைத்து எம்எல்ஏக்களிடமும் கையெழுத்து வாங்க இருப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவியது.
 
இதனால் பதற்றமான அதிமுக எம்எல்ஏக்கள் தங்களுக்கு வேண்டிய அமைச்சர்களுக்கு பரவுகின்ற செய்தி பற்றி விளக்கம் கேட்டுள்ளனர். அவர்களோ இல்லை இல்லை சசிகலாதான் முதல்வர் என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.
 
இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக்க அனைத்து எம்எல்ஏக்களிடமும் கையெழுத்து வாங்கப்படும் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :