Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண் எம்எல்ஏ கீதாவை காணவில்லை: கணவர் ஆட்கொணர்வு மனு!

பெண் எம்எல்ஏ கீதாவை காணவில்லை: கணவர் ஆட்கொணர்வு மனு!

Caston| Last Modified வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (12:43 IST)
கிருஷ்ணராயபுரம் அதிமுக கீதாவை காணவில்லை என அவரது கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் நாற்காலியில் அமர அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்காக தனது கட்டுப்பாட்டில் அனைத்து எம்எல்ஏக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களை நட்சத்திர சொகுசு விடுதியில் சிறைவைத்துள்ளதாக செய்திகள் வருகின்றனர்.

இந்நிலையில் பலரும் எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டுள்ளனர் என பரவலாக பேச ஆர்ம்பித்துள்ளனர். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. காபந்து அரசின் முதல்வர் பன்னீர்செல்வமும் இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லை என்று கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனது மனைவி எம்எல்ஏ கீதாவை போன்று பல அதிமுக எம்எல்ஏக்களை தங்களின் சுய லாபத்திற்காக கடத்திச் சென்று சிறை வைத்துள்ளனர். எனவே, எனது மனைவியை சென்னை உயர் நீதிமன்றம் கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :