வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:30 IST)

மந்திரிகளா? மன நோயாளிகளா? - மௌனப்புரட்சியில் தமிழக மக்கள்

ஆயுதங்களும், காகிதங்களும், பூஜைக்கானது அல்ல! புரட்சிக்கானது! போராட்டத்திற்க்கானது! இந்த தமிழக அரசும், அதிமுக மந்திரிகளும், தவறுகளுக்கானவர்கள்! தப்புகளுக்கானவர்கள்!


 


தன்மானமா, தற்காப்பா என்றால் இவர்கள் தங்கள் தற்காப்பை தான் தேர்தெடுப்பர்கள். அவ்வாறு அவர்கள் தேர்தெடுத்தன் விளைவு! நாசம்! சர்வ நாசம்! உதய், உணவு பாதுகாப்பு மசோதா, நெடுவாசல், கதிராமங்கலம், நீட், அனிதா மரணம். இது மக்களால் மக்களுக்கான அரசு அல்ல! மந்திரிகளால் மந்திரிகளுக்கான அரசு  இது !
 
மந்திரி சீனிவாசன் நான் பார்க்கவில்லை என்பார் ! செல்லூர் ராஜு பார்த்தேன் என்பார்! மணியன் பார்க்கவில்லை என்பார் ! மந்திரிகள் மனநோயாளிகள்  இல்லை. இதை எல்லாம் தலைப்பு செய்தியாக பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தான் மன மனநோயாளிகள்.
 
முல்லைக்கு  தேர் கொடுத்த பாரியின் நாட்டில் வைகைக்கு தெர்மோகோல் கொடுத்தார் ராஜு என்பதை சரித்திரம் சொல்கிறது. சோப்பு நுரைக்கும் தொழிற்சாலை கழிவுக்கும் உள்ள வித்தியாசத்தை சரியாக சொன்ன வேதியியல் விஞ்ஞானி, சாவு வீட்டில் வாழ்த்து சொன்ன சமூக விஞ்ஞானி, இவர்கள் எல்லாம் தெளிவானவர்கள். தர்மத்து நாயகன் ஒரு அரசு விழாவிலே இன்னொரு மந்திரியை காமெடி நடிகன் என்கிறார். மந்திரிகள் மனநோயாளிகள்  இல்லை. மக்கள் தான் மன மனநோயாளிகள்.
 
இந்த மந்திரிகளுக்கு எல்லாம் இரண்டே குறிக்கோள்கள் தான். ஒன்று பெர்ஸண்டேஜ் பிரித்து கொள்வது, பிரித்ததை பாதுகாத்து கொள்வது, என்பது மட்டும்தான்.  இந்த குறிக்கோளை எட்ட, இன்று  சசிகலாவையும், தினகரனையும், வசை பாடும் மந்திரிகள் நாளையே சசிகலாவை தியாக தலைவி என்பார்கள்! அப்போதும் மந்திரிகள் மன நோயாளிகள் அல்ல மக்கள் தான் மன நோயாளிகள். 
 
இவர்கள் எல்லாம் மக்கள் பிரச்சனை பேசிப் பல நாட்கள் ஆகிவிட்டது. மாமா பிஸ்கோத்து! ஒராயிரம்! ஈராயிரம்! என எப்போதும் ஜெயலலிதா மரணம், அப்போலோ மட்டும் பேசும் இந்த  மந்திரிகள் மன நோயாளிகள் அல்ல மக்கள் தான் மன நோயாளிகள்.
 
மீசைகள் எல்லாம் பாரதியா !
 
தாடிகள் எல்லாம் தாகூரா !
 
இந்த மந்திரிகள் எல்லாம் மந்திரிகளா !
 
இல்லை இவர்கள் மகான்கள் !
 
இவர்கள் ஆட்சியை நாளையா சரித்திரம் பேசும் !
 
மக்கள் மௌனம் களையும் வரை எங்களை ஆளுக! அது வரைதான் இந்த ஆட்சியின் நாட்கள்! 

 
இரா காஜா பந்தா நவாஸ்