Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பதவி நீக்கம் செய்தால் சிக்க வைத்து விடுவாரா விஜயபாஸ்கர்? - அச்சத்தில் அமைச்சர்கள்?


Murugan| Last Updated: வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (16:06 IST)
சுகாதரத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டால், வருமான வரித்துறையினரிடம் நம்மை பற்றி விஜயபாஸ்கர் போட்டு கொடுத்து விடுவாரா என அதிமுக அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கியிருப்பதால் அவரின் பதவி பறிக்கப்பட வேண்டும் என புகார் எழுந்து வருகிறது.
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்த நிலையில், அதில் திருப்தி அடையாத அதிகாரிகள், வருகிற 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 
இதனால் அதிருப்தி அடைந்த 20க்கும் மேற்பட்ட அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அமைச்சர்களின் பலரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கும். இதனால் ஆளும் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் முறையிட்டதாக தெரிகிறது. மேலும், அதிருப்தி அமைச்சர்களுடன் தினகரனை இன்று மாலை சந்தித்த தம்பிதுரை, விஜயபாஸ்கரை ராஜினாமா செய்ய வைப்பது குறித்து விவாதித்தாக தெரிகிறது.

இந்நிலையில்,
 வருகிற 17ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். எனவே, ஒரு பக்கம், விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய கோரி அமைச்சர்கள் நெருக்கடி கொடுத்தாலும், அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டால், அந்த கோபத்தில் தம்மை பற்றிய விபரங்களையெல்லாம் வருமான வரித்துறையினரிடம் விஜயபாஸ்கர் கூறிவிடுவாரோ என்கிற பயமும் அதிமுக அமைச்சர்கள் பலரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :