செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 3 மே 2016 (12:21 IST)

இந்தோனேஷியாவில் பணத்தை பதுக்கும் அதிமுக அமைச்சர்கள்: கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுக அமைச்சர்கள் முறைகேடுகள் மூலம் கொள்ளையடித்த பணத்தை இந்தோனேஷியா வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
தமிழகத்தில் நிலக்கரி இறக்குமதியில் 1500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்ற புகாருக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதில் என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மின்வாரியத்துக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களின் தேவைக்காக 140 டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது தமிழக அரசு. தற்போது நிலக்கரியின் விலை குறைந்துள்ள நிலையில், ஒரு டன் நிலக்கரி ரூ.5752-க்கு வாங்குவதாக பொய் கணக்கு எழுதப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன என கூறியுள்ளார்.
 
மேலும், முறைகேடு மூலம் ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு அந்த பணத்தை அதிமுக அமைச்சர்கள் இந்தோனேஷியா வங்கியில் சேமித்துவைத்து வருவதாக தற்போது செய்திகள் வந்துள்ளன. இது குறித்து முதல்வரோ, மின்சாரத்துறை அமைச்சரோ, மின்வாரிய அதிகாரிகளோ மறுக்கவில்லை என்றார் கருணாநிதி.