1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2019 (08:51 IST)

அமித்ஷா அப்படி என்ன தப்பா பேசிட்டார்... சட்பைக்கட்டு கட்டும் கடம்பூர் ராஜூ!

இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை, ஆனால் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே இருக்கும் என தெரிவித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. 
 
இந்தி தின கொண்டாட்டத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதுதான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். 
 
ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது இந்தி மொழியால் மட்டுமே  முடியும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 
இது கடும் சர்ச்சைகளை எழுப்பியது. அமித்ஷாவின் கருத்திற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்தன. குறிப்பாக திமுக இதை எதிர்த்து வரும் 20 ஆம் தேதி கண்ட ஆர்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. 
 
இந்நிலையில், அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். அவர் கூறியதாவது, இந்தி குறித்து அமித்ஷா கூறியதில் தவறில்லை. ஆனால் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே இருக்கும். இதில் மாற்றுக்கருத்ஹு இல்லை. 
 
தமிழை மையமாக வைத்து தமிழுக்கு உரிய மரியாதை கிடைக்கும் வகையிலும், தமிழை பாதுகாக்கும் வகையிலும் அரசு செயல்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.