1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (15:31 IST)

சசிகலா பெயரை கூறியவுடன் வெளியேறிய உறுப்பினர்கள்...

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஜெ.வின் நீண்ட நாள் தோழியான சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


 

 
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக பொதுக்குழு இன்று காலை கூடியது. அதில் ஜெ.வின் தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்பின், போயஸ் கார்டன் சென்று, தீர்மானத்தின் நகலை தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவிடம் கொடுத்தார். அதன் பின் அந்த பொறுப்பை தான் ஏற்றுக் கொள்ள சசிகலா சம்மதம் தெரிவித்ததாக ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
 
இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் நடந்த சில விவகாரங்கள் தற்போது வெளியே கசிந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செயற்குழு உறுப்பினர்கள் 280 பேர்களும், 50 மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2770 பேர் அந்த கூட்டத்தில் பங்கேற்பதாக முதலில் கூறப்பட்டது.
 
ஆனால், சசிகலா தலைமையை விரும்பாத சில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையாம். அதேபோல், கூட்டத்தில் கலந்து கொண்ட சில உறுப்பினர்கள், சசிகலாவின் பெயரை கூறியதும், அரங்கிலிருந்து வெளியேறி விட்டார்களாம். 
 
இந்த சம்பவங்கள் கூட்டத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும், முக்கிய உறுப்பினர்கள் சசிகலாவை பொதுச்செயலராக அறிவித்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.