Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நீங்கதான் நியாயம் கேட்கணும் : அதிமுக கரை வேட்டியுடன் ஸ்டாலினை சந்தித்த தொண்டர்கள்


Murugan| Last Updated: வியாழன், 29 டிசம்பர் 2016 (17:46 IST)
ஜெ.வின் சமாதியை பார்க்க வந்த சில விசுவாசிகள், கோபாலபுரம் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது.

 

 
கடந்த 5ம் தேதி ஜெயலலிதா இறந்தவுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அதிமுக விசுவாசிகள், சென்னை மெரினா கடற்கரையில் அவர் அடக்கம் செய்யப்பட்ட சமாதியை பார்ப்பதற்காக தினமும் வந்த வண்ணம் உள்ளனர். 
 
இந்நிலையில், அப்படி அதிமுக கரை வேட்டியுடன் கரூரிலிருந்து சென்னை வந்த 12 பேர் இன்று காலை ஜெ.வின் சமாதி மற்றும் மெரினா கடற்கரையை சுற்றி பார்த்துள்ளனர். அதன் பின் அவர்கள் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை.
 
அப்போது விட்டில் இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களை பார்த்து விட்டு, காவலர்களிடம் உள்ளே விட சொல்லியிருக்கிறார். அதன்பின் வீட்டிற்குள் வந்த அவர்களிடம் உங்கள் ஊர் எது?, சென்னையில் எங்கெல்லாம் சுற்றி பார்த்தீர்கள்? என எளிமையாக அவர்களிடம் 15 நிமிடம் மு.க.ஸ்டாலின் உரையாடினாரம். மேலும், அவர்களோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டாராம்.


 

 
மு.க.ஸ்டானிடம் பேசிய அவர்கள், எங்க அம்மாவை கொன்னுட்டாங்க.. நீங்கதான் கேசு போட்டு அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கனும் என கூறினார்களாம். அதிமுக விசுவாசிகளே ஸ்டாலினிடம் இப்படி பேசியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.


இதில் மேலும் படிக்கவும் :