1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 22 மே 2015 (12:40 IST)

அதிமுக சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் யார் யார் ?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் 8 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
 
இன்று காலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகும் வகையில், அவரை சட்டமன்றப் பேரவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.
 
தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு 152 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 144 எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவராக உள்ள தனபால், அப்பதவியின் மாண்பு கருதியும், அமைச்சர் செந்தூர் பாண்டியன் உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும், வேளாண்அதிகாரி முத்துக்குமாரசாமி கொலை வழக்கில் சிக்கி சிறையில் உள்ள, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
 
மேலும், சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், எம்எல்ஏவான சரத்குமார், அதே கட்சியைச் சேர்ந்த நாராயணன், இந்திய குடியரசுக் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு ஆகிய நான்கு பேரும், சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பதால் அவர்களையும் அதிமுகவின் சட்ட மன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் அதிமுக கட்சி உறுப்பினர் அல்ல என்பதால் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
ஆர்.கே.நகர் எம்எல்ஏ வெற்றிவேல், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்காக தான் போட்டியிட்டு வெற்றி பெற ஏதுவாக தனது எம்எல்ஏ  பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.