Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அம்மா இடத்தில் சசிகலாவா?- தற்கொலை செய்துகொண்ட அதிமுக தொண்டர்

செவ்வாய், 3 ஜனவரி 2017 (12:18 IST)

Widgets Magazine

தமிழக அரசியல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பை அடைந்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் அதிமுக பொதுச் செயலாளர் ஆனார் சசிகலா. இதையடுத்து முதல்வர் பதவிதான் என்று எழுந்த பேச்சுகள் உண்மையாக்கும் சம்பவங்கள் தற்போது அரங்கேறி வருகின்றன. வருகிற பொங்கலுக்குள் சசிகலா முதல்வராக பதவி ஏற்பார் என்று பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.


 

இந்த செய்தி சிலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் பல்வேறு தரப்பினருக்கு விருப்பம் இல்லை என்றே கூறப்படுகிறது. தமிழகத்தில் பவேறு பகுதிகளில் சசிகலா பேனர்கள் கிழித்து தொண்டர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா முதல்வராக உள்ளார் என்ர செய்தியால் விரக்தி அடைந்த சென்னையை சேர்ந்த அதிமுக தொண்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. தீவிர அதிமுக விசுவாசியான இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து மிகவும் சோகமாகவே காணப்பட்டாராம். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படபோது தனது வருதத்தை மற்ற தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வராக சசிகலா பொறுப்பேற்கவேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதனால் கடும்விரக்தி அடைந்த முனுசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

என் மகள் உனக்கு; உன் தங்கை எனக்கு; பெண்களை மாற்றிக்கொண்ட நபர்கள்

தன்னுடைய மகளை ஒருவருக்கு கொடுத்து விட்டு, அவரின் தங்கையை 2வது திருமணம் செய்து கொண்ட ஒரு ...

news

ஜெ.விற்கு ட்ரீட்மெண்ட் கொடுத்த ’ரிச்சர்ட் பீலே’ நடிகரா?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் ரிச்சர்ட் பீலே குறித்தான கூகுள் தகவலில், ...

news

வாய்யையும், காதுகளையும், கண்களையும் மூடி கொண்டதா சசிகலாவின் பன்னீர் அரசு?

அடுத்தடுத்து தமிழக அரசியல் நிகழ்வுகள், பண மதிப்பு நீக்க நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு என்று ...

news

பொன்னையனின் விலை உயர்ந்த செல்போனை அபேஸ் செய்த மர்ம ஆசாமி

அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையனின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனது.

Widgets Magazine Widgets Magazine