Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிமுக வங்கி கணக்கு மூடல் குறித்து அதிகாரிகள் பரிசீலனை!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (14:36 IST)
அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்க கோரி பொருளாளரும், முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

 
 
அதிமுகவின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கக் கோரி மயிலாப்பூரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார். 
 
மேலும், தனது உத்தரவு இல்லாமல் கணக்கை இயக்கக் கூடாது என்றும் அவர் கோரியுள்ளார். இந்தக் கோரிக்கை குறித்து வங்கி அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 
 
முதல்வரின் கோரிக்கையை ஏற்று வங்கிக் கணக்கை முடக்கி வைக்கும் முடிவுக்கு வரக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :