1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (05:25 IST)

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி: தேர்தலுக்கு பின் என்ன நடக்கும்?

மக்களவை தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தேமுக தலைவர் விஜயகாந்த் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார்.
 
இந்த ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் தேமுதிக, அதிமுக வேட்பாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு அளிக்கவும் ஒப்புக்கொண்டது.
 
திமுக கூட்டணியில் கதவு அடைக்கப்பட்டதாலும், தனித்து நின்றால் டெபாசிட் கூட தேறாது என்பதாலும், பிரேமலதாவின் முதிர்ச்சியற்ற செய்தியாளர்கள் சந்திப்பாலும், தேமுதிகவால் எந்தவித நிபந்தனையும் அதிமுகவிடம் தெரிவிக்க முடியவில்லை. மாறாக அதிமுகவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க வேண்டிய கட்டாய நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டது. 
 
அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் அதிமுகவிடம் இருந்து பெற்றுள்ள நான்கு தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றே கருத்துக்கணிப்புகளும் சமூக வலைத்தள பதிவுகளும் கூறுகின்றன.

அதே நேரத்தில் தேமுதிகவின் வாக்குகள் அதிமுகவுக்கு 21 சட்டமன்ற தேர்தலில் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வழக்கம்போல் தேர்தல் முடிவு வெளியான மறுநாளே இந்த கூட்டணியில் உடையும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.