Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எயிட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகை த்ரிஷா மரணம்: போஸ்டரால் பரபரப்பு!

எயிட்ஸ் பாதிக்கப்பட்ட நடிகை த்ரிஷா மரணம்: போஸ்டரால் பரபரப்பு!


Caston| Last Modified சனி, 14 ஜனவரி 2017 (12:41 IST)
நடிகை த்ரிஷா பீட்டா அமைப்பின் தூதுவராக இருப்பதால் அவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர் என கருதி நடிகை த்ரிஷாவுக்கு எதிராக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

 
 
நடிகை த்ரிஷா கர்ஜனை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்தது. இதனையடுத்து படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடிகை த்ரிஷாவின் கேரவனை முற்றுகையிட்டு படப்பிடிப்பையே நிறுத்தினர்.
 
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் த்ரிஷாவுக்கு எதிராக மீம்ஸ்கள் போட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஒரு படி மேலே சென்று நடிகை த்ரிஷா எயிட்ஸ் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
 
இதில் த்ரிஷாவின் குடும்பத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :