Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடிகை திரிஷா சிறைபிடிப்பு!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடிகை திரிஷா சிறைபிடிப்பு!


Caston| Last Modified வெள்ளி, 13 ஜனவரி 2017 (13:38 IST)
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் இந்த ஆண்டு தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என பொதுமக்கள் ஒரே குரலில் உரக்க கூறி வருகின்றனர்.

 
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தொடர்ந்து அதற்கு எதிராகத்தான் பேசி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இந்த வருடம் மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தால் போராட்டக்களம் தீவிரமடைந்துள்ளது.
 
தமிழ் சினிமாவில் நடிக்கும் சில நடிகைகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். நடிகைகள் அந்த அமைப்பிற்கு தூதுவர்களாக கூட நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் நடிகை திரிஷாவும் உள்ளார்.
 
இந்நிலையில் சிவகங்கை அருகே காரைக்குடியில் படப்பிடிப்புக்கு வந்த நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சிறைபிடித்தனர். 50-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நடிகை திரிஷாவை படப்பிடிப்பு தளத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் நடிகை திரிஷாவுக்கு எதிராக கோஷங்கள், கண்டன முழக்கங்கள் எழுப்பி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். திரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.


இதில் மேலும் படிக்கவும் :