வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 3 டிசம்பர் 2016 (12:27 IST)

3 குழந்தைக்கு தாய் என்பது ஒரு தகுதியா? : ஸ்ரீபிரியா - லட்சுமி ராமகிருஷ்ணன் மோதல்

தொலைக்காட்சியில் பஞ்சாயத்து செய்யும் நிகழ்ச்சியை நிறுத்துங்கள் என்று நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்சனை அலசும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கு எதிராக நடிகை ஸ்ரீப்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
 
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும், சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது சன் டிவியிலும் நிஜங்கள் என்ற பெயரில் நடிகை குஷ்பூ குடும்ப பிரச்சனைகளை வைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.   
 
மேலும், இது போன்ற நிகழ்ச்சிகளை தெலுங்கில் நடிகை ரோஜா தற்போது கீதா, மலையாளத்தில் நடிகை ஊர்வசி போன்ற நடிகைகள் நடத்தி வருகின்றனர். 
 
நடிகை ஸ்ரீபிரியா இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். குடும்ப பிரச்சனைகளை தீர்க்க நீதிமன்றம், ஆலோசனை மையங்கள் இருக்கிறது. நடிகைகள் எதற்கு அதை செய்கிறார்கள்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதுபற்றி கருத்து கூறிய குஷ்பு, எங்களை தேடி மக்கள் வருகிறார்கள். அவர்கள் பிரச்சனையை அக்கறையுடன் பேசுகிறேன். நிகழ்ச்சி நடத்துவது  யார் என பார்க்க வேண்டாம். முடிவை பாருங்கள்கள் என்றார்.
 
“4 வருடமாக இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டு வருகிறேன். அதேபோல், நான் 3 குழந்தைகளுக்கு தாய். எனக்கு எல்லா தகுதியும் இருக்கு” என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், ஸ்ரீபிரியா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ 3 குழந்தைகளுக்கு தாய் என்பது ஒரு தகுதியா?.. அப்படியெனில், மஹாபாரதத்தில் 101 பிள்ளைகளுக்கு தாயான காந்தாரிக்கு எவ்வளவு தகுதி என கற்பனை செய்து பாருங்கள்” என கிண்டலடித்துள்ளார்.
 
அதேபோல், “நடிகை குஷ்பு தனது நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்துவதாகவும், நிறைய பேருக்கு பிடித்திருப்பதாகவும் கூறுகிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களை வா போ என அழைப்பதுதான் வித்தியாசமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.