நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?

நடிகை குஷ்பு செய்த காரியம் என்ன தெரியுமா?


K.N.Vadivel| Last Updated: ஞாயிறு, 22 மே 2016 (09:58 IST)
தமிழ சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கு நடிகை குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 
நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தல் முடிவு பற்றி  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், தேர்தலில் சிலர் வெற்றியும், சிலர் தோல்வி அடைவது இயல்புதான். தமிழக தேர்தலில் வென்றிவாகை சூடிய அதிமுகவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பலர் மிக உயரத்துக்கு சென்றதையும், அவர்களே கிழே விழுந்துள்ளதையும் பார்த்துள்ளேன். உங்களுக்கு பதில் சொல்வதைவிட எனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வெளிநாடு செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
இந்த தேர்தலில் அதிமுக பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் கடும் விமர்சனம் செய்த நடிகை குஷ்பு ஜெயலலிதாவுக்கும், அதிமுக அரசுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது பலரது புருவத்தை உயரவைத்துள்ளது.
 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :